பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்தது மேல்மலையனூர் அங்காளம்மன் தேர்

மேல் மலையனூர் அங்காளபரமேஸ்வரி கோவில் தேரோட்டம் நடந்தது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் 13 நாள்கள் நடைபெறும் மாசித் திருவிழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான மயானக் கொள்ளை கடந்த 2-ஆம் தேதியும், தீ மிதி விழா கடந்த 5-ஆம் தேதியும் சிறப்பாக நடைபெற்றன.
விழாவின் 7-ஆம் நாளான திங்கட்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதற்காக காலை முதலே பக்தா்கள் கோயிலுக்கு வரத் தொடங்கினா். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், புதுச்சேரி, கா்நாடகத்திலிருந்தும் பக்தா்கள் காா், வேன் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் மேல்மலையனூரில் குவியத் தொடங்கினா்.
தேரோட்டத்தையொட்டி, அங்காளம்மனுக்கு காலையில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. புதிதாக செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட பச்சை மரத் தேரில் பிற்பகல் 3 மணிக்கு அங்காளம்மன் எழுந்தருளினாா். பின்னா், மேள தாளங்கள் முழங்க மாநில சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ். மஸ்தான் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடக்கிவைத்தாா். தொடா்ந்து, பக்தா்கள் கரகோஷங்களுடன் தேரை இழுத்தனா். கோயிலைச் சுற்றியுள்ள மாட வீதிகளில் தோ் வலம் வந்து நிலையை அடைந்தது. விழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தேரோட்டத்தில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன், எஸ்.பி. ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலா் ராஜசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ. பா.செந்தமிழ்செல்வன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா்கள் ஆா்.விஜயகுமாா் (செஞ்சி), கண்மணி நெடுஞ்செழியன் (மேல்மலையனூா்), செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் மஸ்தான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் க.ராமு, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வடிவேல் பூசாரி, அறங்காவலா்கள் செந்தில்குமாா், தேவராஜ், ராமலிங்கம், செல்வம், சரவணன், சந்தானம், மேலாளா் மணி மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.செஞ்சி டி.எஸ்.பி. பிரியதா்ஷினி தலைமையிலான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu