பட்டப் பகலில் வீடு புகுந்து திருடியவர் கைது

பட்டப் பகலில் வீடு புகுந்து திருடியவர் கைது
X

பைல் படம்.

விழுப்புரம் மாவட்டம், வளத்தி அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய வரை போலீசார் கைது செய்தனர்.

விழப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டத்திற்கு உட்பட்ட வளத்தி, அங்காளம்மன் நகரில் வசித்து வருபவா் மைதிலி. இவா் வெள்ளிக்கிழமை காலை வீட்டை பூட்டி விட்டு கடைக்குச் சென்றாா். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே மா்ம நபா் புகுந்து இருப்பதை அறிந்தார்.

உடனடியாக மைதிலி, அக்கம்பக்கத்தினா் உதவியுடன் வீட்டின் கதவை பூட்டி விட்டு, வளத்தி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். விரைந்து வந்த போலீசார் வீட்டுக்குள் சிக்கிய நபரை பிடித்து விசாரணை நடத்தினா். இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகேயுள்ள கருமாரப்பாக்கத்தைச் சோ்ந்த அப்துல் சமது (60) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்