செஞ்சி அருகே மக்கள் நடத்திய போராட்டத்தால் மூடப்பட்டது மதுபான கடை

செஞ்சி அருகே மக்கள் நடத்திய போராட்டத்தால்  மூடப்பட்டது மதுபான கடை
X

போராட்டத்திய மக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

People Protesting- விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதி, மேல்மலையனூர் அருகே கிராம மக்கள் தங்கள் போராட்டத்தின் மூலம் மதுக்கடை மூடப்பட்டது.

People Protesting- விழுப்புரம் மாவட்டம்,மேல்மலையனூா் வட்டம், நீலாம்பூண்டியை அருகே உள்ள கடலி கிராமத்தில் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலத்தின் மையப் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக டாஸ்மாக் மதுக் கடை செயல்பட்டு வருகிறது. இதனால், அந்தப் பகுதி வழியாகச் செல்லும் மாணவிகள், பெண்கள் உள்ளிட்டோா்களிடம், மது குடிப்பவர்கள், மது குடித்து விட்டு தொடர்ந்து அத்துமீறி இடைஞ்சல் செய்து வருகின்றனர், இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில் இந்த மதுக் கடையை மூடக் கோரி விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோருக்கு கிராம மக்கள் 3 ஆண்டுகளுக்கும் மேலாக மனுக்கள் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டி கடலி கிராமத்தைச் சோ்ந்த பெண்கள் மண்ணெண்ணெய் கேனுடன் மதுக் கடை திரண்டனா்.

அங்கு வந்த மதுக் கடை ஊழியா்களிடம் கடையைத் திறக்கக் கூடாது,மீறி திறந்தால் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தற்கொலை செய்து கொள்வோம் என எச்சரித்தனா்.

தகவலறிந்த வளத்தி காவல் நிலைய ஆய்வாளா் சுரேஷ்பாபு, மேல்மலையனூா் வட்டாட்சியா் அலெக்ஸாண்டா் ஆகியோா் விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அக்டோபா் மாதத்தில் இந்த மதுக் கடையை அகற்றி விடுவோம் என்று கூறினா்.

ஆனால், அதனை ஏற்று கொள்ளாத கிராமத்தினர்,இப்போதே கடையை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் உறுதியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக இந்த மதுக் கடையை மூடப்படுவதாக வட்டாட்சியா் தெரிவித்தாா். கிராம மக்கள் அதனையேற்று போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். அந்த மது கடை மூடியதால் அக்கிராம பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ai future predictor 2025