மேல்மலையனூர் அருகே போலி ஆவணம் தயாரித்து நிலம் மோசடி

மேல்மலையனூர் அருகே போலி ஆவணம் தயாரித்து நிலம் மோசடி
X

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் (கோப்பு படம்).

மேல்மலையனூர் அருகே நில மோசடியில் ஈடுபட்ட நாலு பேரு மீது மாவட்ட நில அபகரிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேல்மலையனூர் அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ.7¾ லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை அய்யப்பன் தாங்கல் குளத்துவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் நடராஜன் மகள் சுகந்தி (வயது 45). நடராஜன் பெயரில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சக்கராபுரம் பகுதியில் 3½ செண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை சந்தானலட்சுமி என்பவர் கிரையம் செய்து கொடுத்தார். அந்த நிலம் பாகப்பிரிவினை செய்யப்படாமல் நடராஜன் பெயரிலேயே உள்ளது. இந்நிலையில் மேல்மலையனூர் தாலுகா சிறுதலைப்பூண்டியை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் மனைவி பத்மாவதி (34) என்பவர் சுகந்தியின் ஆதார் எண்ணை பயன்படுத்தியும், அவரது கையொப்பத்தை தானாகவே ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ளார்.

மேலும் பத்மாவதி, அவரது கணவர் கோகுலகிருஷ்ணன் (47), நடராஜன் மனைவி சரோஜா (76) ஆகிய 3 பேரும் சேர்ந்து செஞ்சி குறிஞ்சி நகரை சேர்ந்த மணி மனைவி அஞ்சலை (62) என்பவருக்கு கிரையம் செய்து கொடுத்து மோசடி செய்துள்ளனர். அபகரிக்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.7 லட்சத்து 75 ஆயிரத்து 850 ஆகும். இதுகுறித்து சுகந்தி, விழுப்புரம் மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பத்மாவதி உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர் சையத்அப்துல்ரசாக் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்