செஞ்சி அருகே மூதாட்டியிடம் நகை அபேஸ்: போலீஸ் விசாரணை
பைல் படம்.
Gold Robbery -விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி லட்சுமி (வயது 75). நேற்று மாலை லட்சுமி, வீட்டின் வெளியே இருந்தார். அப்போது, அங்கு வந்த 35 வயதுடைய பெண், லட்சுமியிடம் குடிக்க தண்ணீர் கேட்டு பேச்சு கொடுத்தார். பின்னர் லட்சுமி கழுத்தில் அணிந்திருந்த நகை அழகாக உள்ளது, அதை போன்று தனக்கும் நகை செய்ய ஆசை என்று கூறி அதை காண்பிக்குமாறு கூறியுள்ளர்.
அப்போது, லட்சுமி வேறு நகை உள்ளது என்று கூறி, வீட்டுக்குள் இருந்து ஒரு பையை எடுத்துவந்தார். அந்த பையில் இருந்த நகையை எடுத்து அந்த பெண்ணிடம் காண்பித்தார். சிறிது நேரத்தில் அந்த பெண், தனக்கு குங்குமம் வேண்டும் என்று கேட்டார். அதை எடுக்க சென்ற லட்சுமி, நகை பையை வெளியே வைத்துவிட்டு சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அந்த பெண் நகை பையுடன் மாயமாகி விட்டார்.
அதில் 8 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் மற்றும் வங்கி புத்தகம் ஆகியன இருந்தது. இது குறித்து லட்சுமி நல்லான் பிள்ளை பெற்றாள் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து, மூதாட்டியிடம் நகைகளை அபேஸ் செய்து ஓட்டம் பிடித்த பெண்ணை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் இது மாதிரி முகம் தெரியாதவர்கள் இடம் வீட்டிற்கு உள்ளே அழைப்பதும், வீட்டில் உள்ள பவுன் உள்ளிட்ட பொருள்களை காண்பிப்பது எவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்பது இந்த சம்பவமே உதாரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu