செஞ்சி அருகே கோயில்களில் உண்டியல் உடைப்பு: போலீசார் விசாரணை

செஞ்சி அருகே கோயில்களில் உண்டியல் உடைப்பு: போலீசார் விசாரணை
X

கோவிலில் உடைக்கப்பட்ட உண்டியல்.

செஞ்சி அருகே உள்ள இரண்டு கோயில்களில் உண்டியலை உடைத்து திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி சத்திரத் தெருவில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இதே போல் செஞ்சி எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இவை இரண்டும் மக்கள் நடமாட்டமுள்ள பகுதியாகும். இந்நிலையில் நேற்று இரவு யாரோ மர்ம நபர்கள் இந்த 2 கோவில்களிலும் இருந்த உண்டியல்களை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இரண்டு கோவில்களிலும் கொள்ளையடிக்கப்பட்ட பணம் சுமார் ரூ 20 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து மாரியம்மன் கோவில் அறங்காவலர் அரங்க. ஏழுமலை மற்றும் அங்காளம்மன் கோவில் அறங்காவலர் கடம்பன் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் நேரில் சென்று விசாரணை செய்து, உண்டியலை உடைத்த மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.

Tags

Next Story