செல்ப் மோட்டார் பழுது காரணமாக அவதியுறும் அரசு பேருந்து ஓட்டுநர்கள்

செல்ப் மோட்டார் பழுது காரணமாக அவதியுறும் அரசு பேருந்து ஓட்டுநர்கள்
X

செஞ்சி பேருந்து நிலையத்தில் பழுதாகி நிற்கும் பேருந்து

செஞ்சி பேருந்து பணிமனையில் இயங்கும் பெரும்பாலான நகர பேருந்துகளில் செல்ப் மோட்டார் இயங்காததால் ஓட்டுநர்கள் அவதியுறுகின்றனர்

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து, சுற்றியுள்ள கிராமங்களுக்கு சுமார் 50க்கும் மேற்பட்ட அரசு கிராம பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில் பெரும்பாலான பேருந்துகளில் இன்ஜினை இயக்க உதவும் செல்ப் மோட்டார் பழுதாகி உள்ளது.

இதன் காரணமாக பேருந்து நிலையத்தில் அந்த பேருந்துகளின் இஞ்சின் இயக்கத்தை நிறுத்தாமல், பயணிகளை ஏற்றி கொண்டு புறப்படும் வரை பல மணி நேரம் இயங்கிக்கொண்டே இருக்கிறது. அதனால், டீசல் அதிக அளவில் வீணாகி, ஓட்டுநர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

பேருந்துகள் எங்காவது நின்று விட்டால் தள்ளவேண்டிய நிலையும் அடிக்கடி ஏற்படுவதாக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர். டீசல் விலையைக் கருத்தில் கொண்டு உடனடியாக செல்ப் மோட்டார்களை இல்லாத பேருந்துகளில் மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!