விழுப்புரத்தில் தாலிக்கு தங்கம் நலத்திட்ட உதவி : அமைச்சர் வழங்கல்

விழுப்புரத்தில் தாலிக்கு தங்கம் நலத்திட்ட உதவி : அமைச்சர் வழங்கல்
X

விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் மஸ்தான் தாலிக்கு தங்கம் வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற தாலிக்கு தங்கம் நிகழ்ச்சியில் அமைச்சர் மஸ்தான் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட வல்லம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில்தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.,

திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவியினை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் இன்று (24.01.2022) பயனாளிகளுக்கு வழங்கினார். அப்போது மாவட்ட கலெக்டர் த.மோகன் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ம.ஜெயச்சந்திரன் ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!