செஞ்சி சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்

செஞ்சி சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்
X

செஞ்சி ஆட்டு சந்தை - கோப்புப்படம் 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் வார சந்தை நடைபெறுவது வழக்கம்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் வார சந்தை நடைபெறுவது வழக்கம். இதில் ஆட்டு சந்தை மற்றும் கருவாட்டு சந்தை பிரபலமானது. இதேபோல் ஆட்டு சந்தையும் பிரபலமாக உள்ளதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகளை வாங்கி செல்வார்கள். இன்று நடந்த ஆட்டு சந்தையில் ஆடுகள் அமோகமாக விற்பனையானது.

அதிகாலையிலேயே கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதேபோல் வியாபாரிகளும் புதுவை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு, செங்கல்பட்டு, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகாலையிலேயே ஆடுகளை கொள்முதல் செய்ய வந்திருந்தனர். சந்தைக்கு ஆடுகள் வரவும் அதிகமாக இருந்தது.

வியாபாரிகளும் அதிகமாக இருந்ததால் ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்தது. வியாபாரிகள் ஆடுகளை வாங்கி தாங்கள் கொண்டு வந்த லாரி, வேன் போன்றவைகளில் ஏற்றி சென்றனர்.

இந்த வார சந்தையில் ஒரு ஆட்டின் விலை குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து அதிகப்பட்சம் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. இந்த சந்தையில் சுமார் ரூ.6 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடுகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தீபாவளி கொண்டாடுவார்கள் .

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!