செஞ்சி அருகே ஊராட்சியில் சிசிடிவி கேமரா திறப்பு

செஞ்சி  அருகே ஊராட்சியில் சிசிடிவி கேமரா திறப்பு
X

தாயனூர் ஊராட்சியில் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களை துவக்கி வைத்த செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே தாயனூர் ஊராட்சியில் சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் வட்டம், தாயனூர் ஊராட்சியில் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் நடக்காமல் கண்காணித்து தடுக்கும் பொருட்டு அமைக்கப்பட்டிருந்த ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான 10 சிசிடிவி கேமராக்களை ஊராட்சி மன்ற தலைவர் லாவண்யா ராஜேஷ்குமார் ஏற்பாட்டில் செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!