மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் ஆடி அமாவாசை நிகழ்ச்சி ரத்து

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் ஆடி அமாவாசை நிகழ்ச்சி ரத்து
X

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவில்

செஞ்சி அருகே மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர், அங்காளம்மன் கோவிலில் வருகின்ற 06.08.2021 முதல் 08.08.2021 ஆகிய மூன்று நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

இது குறித்து அறநிலையத்துறை உதவி ஆணையர்/செயல் அலுவலர் ராமு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கொரோனா வைரஸ் நோய் பெருந்தொற்று காரணத்தினால் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு வருகின்ற ஆடிவெள்ளி மற்றும் ஆடி அமாவாசை தினங்கள் உட்பட 06.08.2021 முதல் 08.08.2021 ஆகிய மூன்று நாட்களும் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

மேலும், ஆடி அமாவாசை 08.08.2021 அன்றைய தினம் அங்காளம்மன் திருக்கோவிலில் ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுகிறது என கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் எதுவும் இயக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!