மேல்மலையனூர் அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

மேல்மலையனூர் அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்.

மேல்மலையனூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் போலீஸ் விசாரணைக்கு பயந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே உள்ள கீழ்செவெலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த18 வயது பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் செஞ்சி அனைத்து மகளிர் போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த சம்பத், ராமலிங்கம், வெங்கடேசன் ஆகிய 3 பேரை இன்று கைது செய்தனர்.

பின்னர் போலீஸ் வாகனத்தில் ஏற்றி விசாரணைக்காக போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்றனர். அப்போது வெங்டேசன் என்பவர் சிறுநீர் கழிக்க செல்வதாக கூறி தப்பி ஓடி அருகில் உள்ள வைக்கோல் போர் மேல் ஏறி மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

தகவல் அறிந்த வெங்கடேசன் பெற்றோர், உறவினர்கள் ஒன்று திரண்டனர். வெங்கடேசன் தற்கொலைக்கு போலீசார்தான் காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இறந்தவர் உடலை வாங்க மறுத்து அங்கிருந்து எடுத்து செல்லவும் விடாமல் உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.அதனையடுத்து போலீசார் வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!