மின் கம்பத்தை நடுங்க; அல்லது பள்ளத்தையாவது மூடுங்க

மின் கம்பத்தை நடுங்க; அல்லது பள்ளத்தையாவது மூடுங்க
X

சாலை திருப்பத்தில் மூடப்படாமல் இருக்கும் பள்ளம்

செஞ்சி அருகே அனந்தபுரம் பேரூராட்சியில் பள்ளம் தோண்டி பல நாட்களாக மின்கம்பம் நடாமல் மின்வாரியம் அலட்சியம் செய்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட அனந்தபுரம் பேரூராட்சியில், என்று அனந்தபுரம் பவுண்டு கார தெரு திரும்பும் இடத்தில், இந்தியன் வங்கி செல்லும் வழியில், மின்சார கம்பம் நடுவதற்காக ஒரு மாதத்திற்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது.

ஆனால் அந்த இடத்தில் இதுவரைக்கும் மின்கம்பம் நடப்படவில்லை. இது குறித்து அனந்தபுரம் உதவி மின் பொறியாளர் இடம் புகார் செய்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வாகனங்கள் திரும்பும் இடத்தில் இந்த பள்ளம் இருப்பதால் அடிக்கடி இருசக்கர விபத்துக்கள் நடைபெறுகிறது

ஆகவே விபத்துகளை தவிர்ப்பதற்காக மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை முடுக்கி மின்கம்பத்தை உடனடியாக நட வேண்டும் அல்லது பள்ளத்தை உடனடியாக மூட வேண்டும் என்று பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story