இடைநின்ற நரிக்குறவர் மாணவர்களுடன் கல்வி அலுவலர் சந்திப்பு

இடைநின்ற நரிக்குறவர் மாணவர்களுடன் கல்வி அலுவலர் சந்திப்பு
X

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் நரிக்குறவர் குடியிருப்பில் முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா  இடைநின்ற மாணவர்களை சந்தித்தார்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் நரிக்குறவர் குடியிருப்பில் முதன்மை கல்வி அலுவலர் இடைநின்ற மாணவர்களை சந்தித்தார்

மேல்மலையனூர் நரிக்குறவர் குடியிருப்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் மாணவர்களிடம் அரசாங்கம் உங்களை முன்னேற்றுவதற்காக பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தள்ளது. அவற்றை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.பள்ளிக்கு தினமும் செல்ல வேண்டும். பெற்றோர்கள் நீங்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.

பெண் குழந்தைகளுக்கு கல்லூரி சென்றால் மாதத்திற்கு ரூ.ஆயிரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கு செல்லாமல் வியாபாரம் செய்யச் சென்றால் உங்களின் படிப்பு வீணாகிவிடுகிறது.ஆகையால் கண்டிப்பாக அனைவரும் பள்ளிக்கு சென்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும். உங்களை நானே பள்ளியில் சென்று சேர்க்கிறேன் என்று கூறி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 3 மாணவர்களை 10-ம் வகுப்பிலும் 2 மாணவர்களை 9-ம் வகுப்பிலும் சேர்த்து அவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினார்.

Tags

Next Story