மேல்மலையனூர் கோயிலில் நான்கு நாட்கள் தரிசனம் ரத்து

மேல்மலையனூர் கோயிலில் நான்கு  நாட்கள் தரிசனம் ரத்து
X

மேல்மலையனுர் அங்காளம்மன் கோவில் 

பிரசித்திபெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நான்கு நாட்கள் சாமி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது

இந்து அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் வரும் 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு சாமி தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும், 6-ம் தேதி அம்மாவாசை அன்று ஊஞ்சல் உற்சவமும் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறப்பு பேருந்துகள் எதுவும் இயக்கப்படாது என கோவில் நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் அறிவிப்பு வெளிட்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!