செஞ்சி அருகே 400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு: போலீசார் அதிரடி

செஞ்சி அருகே 400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு: போலீசார் அதிரடி
X

ராதாபுரம் ஏரி பகுதியில் சாராய ஊரல்களை போலீசார் அழித்தனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 400 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள நல்லான்பிள்ளைபெற்றாள் காவல் நிலையஎல்லைக்கு உட்பட்ட ராதாபுரம் ஏரியில் சாராய ஊறல்கள் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை கிடைத்தது.

அதனையடுத்து விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவின் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜபாண்டி உத்தரவின்பேரில் செஞ்சி மதுவிலக்கு காவல் உதவி ஆய்வாளர் சங்கர சுப்பிரமணியன் தலைமையில் ராதாபுரம் ஏரி பகுதியில் சோதனை நடைபெற்றது.

அப்போது 2 பேரல்களில் 400 லிட்டர் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது,இதில் சிறப்பாக பணியாற்றிய தலைமை காவலர்கள் அறிவழகன், பரசுராமன்,கோவிந்தராஜ் ,சுரேஷ் லட்சுமணன்,பாரதி, சிவகுமார், தீனா ஆகியோருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!