நெடுஞ்சாலைதுறையை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்குள்ட்பட்ட வளத்தியில் நெடுஞ்சாலை துறையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் கட்சியினர்
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டத்திற்கு உட்பட்ட வளத்தியில் சர்வே எண்.208 ல் சுமார் 100 ஆண்டுகளுக் கும் மேலாக வீடுகட்டி வாழ்ந்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க மூன்று நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கி உள்ள நிலையில், நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில், அரசின் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மதிக்காமல் கடந்த மே மாதம், 25 -ஆம் தேதி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டம் பொறியாளர் ரவிச்சந்திரன் என்பவர் காவல்துறை அதிகாரி செஞ்சி டிஎஸ்பி, மேல்மலையனூர் வட்டாட்சியர் ஆகியோர் துணையோடு, பெருமளவிலான போலீசார், நெடுஞ்சாலைதுறையினர், வருவாய்த்துறையினர் ஆகியோர் திரண்டு வந்து, வீடு கட்ட முயன்றவரின் கட்டுமான பொருட்களை எடுத்து சென்றதோடு, அங்கு நியாயம் கேட்டவர்கள் மீது பொய் வழக்கு போட்டு, அராஜக த்தில் ஈடுபட்டனர்.
நெடுஞ்சாலைத்துறை ரவிச்சந்திரன், செஞ்சி டிஎஸ்பி, மேல்மலையனூர் வட்டாட்சியர் ஆகியோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், சூரையாடி எடுத்து சென்ற ரூ.13 லட்சம் மதிப்பிலான கட்டுமான பொருட்களை திரும்ப வழங்க வேண்டும், நியாயம் கேட்டவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி, மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் டி.முருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் என்.சுப்பரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், எஸ்.முத்துக்குமரன், ஏ.சங்கரன், சே.ஆறிவழகன், ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர், ஆர்பாட்டத்தில் ஏ.உதயகுமார், வெ.விஜியக்குமார், எஸ்.கே.எஸ்.ஹரிஹரகுமார், வி.எழில்ராஜா,சி.குமார், ஆர்.அண்ணாமலை, டி.சுரேஷ், கவிதா உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
டிஎஸ்பி, நெடுஞ்சாலை ஏடி, வட்டாட்சியர் ஆகியோரை இந்த நடவடிக்கைக்கு காரணம் கேட்டால், கலெக்டர் உத்தரவு எனக் கூறி அராஜகத்தில் ஈடுபட்டதாகவும், ஆனால், கலெக்டர் அலுவலகத்தில் இது குறித்து கேட்டபோது கலெக்டர் அலுவலக உத்தரவு எதுவும் இல்லை என தெரிவிக்கின்றனர். அப்படி என்றால் யாரை திருப்திப்படுத்த நீதிமன்ற உத்தரவையும் மீறி இந்த நடவாடிக்கை என கேட்டால், கலெக்டர் உத்தரவு என்ற பதிலையே அராஜகத்தில் ஈடுபடும் அதிகாரிகள் கூறி வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிபிஎம் கட்சினர் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர். நடவடிக்கை இல்லை என்றால் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu