செஞ்சியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

செஞ்சியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
X

செஞ்சியில் கர்நாடக பாஜக அரசை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செஞ்சியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதை தடை செய்த கல்லூரி நிர்வாகம் மற்றும் கர்நாடக பாஜக அரசை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கர்நாடகாவில் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிவதை தடை செய்து அவர்களின் மத உரிமையை பறித்த கல்லூரி நிர்வாகங்களையும், கர்நாடக பாஜக அரசையும் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் மாதர் சங்க வட்ட தலைவர் கே.அமலா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் விக்கிரவாண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி,மாதர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் எஸ்.கீதா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் கே.மாதவன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாவட்ட தலைவர் எஸ.சையத் உஸ்மான், மாதர் சங்கவட்ட செயலாளர் ஆர்.பிரியா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

ஆர்பாட்டத்தில் பழங்குடி மக்கள் பாதுகாப்பு சங்க டபில்யு.ஆல்பர்ட் வேளாங்கண்ணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் வி.சிவன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் டி.ஆர்.குண்டு ரெட்டியார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க டி.அரவிந்த் உட்பட ஏராளமான பெண்களும், இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். இறுதியாக ஜனநாயக மாதர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் வி.சங்கீதா நன்றி கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!