செஞ்சி ராஜகிரி கோட்டையில் சாமி சிலை உடைப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

செஞ்சி ராஜகிரி கோட்டையில் சாமி சிலை உடைப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
X

மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட கமலக்கண்ணி சிலை.

Crime Investigation - விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ராஜகிரி கோட்டையில் உள்ள கோயிலில் சாமி சிலைகள் உடைக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Crime Investigation - விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் ராஜகிரி மற்றும் கிருஷ்ணகிரி கோட்டைகள் உள்ளன. இதில் ராஜகிரி கோட்டையின் மேல் பகுதியில் பிரசித்தி பெற்ற கமலக்கண்ணி அம்மன் கோவில் அமைந்துள்ளது. சுதந்திர தினமான நேற்று வழக்கம் போல் பூசாரி ராமச்சந்திரன் பூஜை செய்வதற்காக வந்தார்.

அப்போது, அங்கிருந்த கமலக்கண்ணி அம்மன் சிலையின் கை மற்றும் கால்கள் உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், அறங்காவலர் அரங்க ஏழுமலை மற்றும் கோட்டை அலுவலகருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் அங்கு வந்து பார்த்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் கோவிலுக்குள் வந்து சிலையின் கை மற்றும் கால்களை உடைத்து சேதப்படுத்தி சென்று இருப்பது தெரியவந்தது.

சம்பவம் குறித்து அறிந்த செஞ்சி பீரங்கி மேடு பகுதி மக்கள் செஞ்சி கோட்டைக்கு திரண்டு வந்து, அங்கிருந்த கோட்டை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சிலையை சேதப்படுத்தியவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இது தொடர்பாக அறங்காவலர் அரங்க ஏழுமலை மற்றும் செஞ்சி கோட்டை அலுவலர் நவீந்திராரெட்டி ஆகியோர் செஞ்சி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர், இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
நாமக்கல் மாவட்டத்தில் 2 விஏஓக்கள் திடீரென சஸ்பெண்ட்!