மேல்மலையனூரில் அனைத்து அரசு அலுவலகங்கள் அமைத்து தர சிபிஎம் கோரிக்கை

மேல்மலையனூரில் அனைத்து அரசு அலுவலகங்கள் அமைத்து தர சிபிஎம் கோரிக்கை
X

மேல்மலையனூர் வட்ட செயலாளராக டி.முருகன் தேர்வு செய்யப்பட்டார்

மேல்மலையனூர் வட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள் அமைத்து தரவேண்டும் என சிபிஎம் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள் உடனடியாக அமைத்து தரவேண்டும் என சிபிஎம் மேல்மலையனூர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேல்மலையனூர் வட்ட 1-வது மாநாடு அவலூர்பேட்டையில் நடைபெற்றது, மாநாட்டிற்கு வட்டக்குழு உறுப்பினர்ஏ.உதயகுமார் தலைமை தாங்கி மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார், வட்ட குழு உறுப்பினர் வி.எழில்ராஜா, .கார்த்திகேயன், சுப்பிரமணியன், டி.முருகன், வி.ராதாகிருஷ்ணன்,பி.குமார் ஆகியோர் பேசினார்,

மாநாட்டில் அவலூர்பேட்டையை பேரூராட்சியாக தரம் உயர்த்தவேண்டும், கடந்த 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 5 ஆண்கள் ஆகியும் மேல்மலையனூர் தாலுகாவிற்கு வட்டாட்சியர் அலுவலகத்தை தவிர வேறு எந்த அரசு அலுவலகங்களும் இதுவரை கொண்டுவரப்படவில்லை உடனடியாக நீதிமன்றம்,கருவூலம், தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்கள் உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,

தொடர்ந்து மேல்மலையனூர் வட்ட செயலாளராக டி.முருகன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.முடிவில் ஏ.என்.ஏழுமலை நன்றி கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!