குடிநீருடன் கழிவுநீர் கலப்பு: தொற்று நோய் அச்சத்தில் பொதுமக்கள்

குடிநீருடன் கழிவுநீர் கலப்பு:  தொற்று நோய் அச்சத்தில் பொதுமக்கள்
X

கழிவுநீருடன் கலந்து வரும் குடிநீர்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் தொற்று நோய் பரவுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட செஞ்சி அருகே உள்ள சிறுநாம்பூண்டி ஊராட்சியில், மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஏரியில் அமைக்கப் பெற்ற ஆழ்துளையிலிருந்து தினந்தோறும் கழிவு நீர் கலந்து குடிநீர் நிறம் மாறி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது,

இதனால் எண்ணற்ற மக்கள் நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர், இதுவரை இதனை ஊராட்சி செயலாளர் கணடு கொள்ளாமல் மெத்தனமாக உள்ளதாக அப்பகுதியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது, உடனடியாக சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story
ai in future agriculture