தற்கொலை செய்துகொண்ட விவசாயி குடும்பத்திற்கு இழப்பீடு

தற்கொலை செய்துகொண்ட விவசாயி குடும்பத்திற்கு இழப்பீடு
X

மின்கோபுரம் அமைத்த பிரச்சினையில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்பட்டது

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மின் கோபுர பிரச்சனையில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கினர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட அன்னமங்கலம் அருகே உள்ள கலிங்கமலையை சேர்ந்த விவசாயி வெங்கடேசன் மகன் மணி என்பவர் தன் வயலில் அமைத்த மின் கோபுரத்திற்கு இழப்பீடு வழங்கவில்லை என்ற விரக்தியில் ஞாயிற்றுக்கிழமை மின் கோபுரத்தின் மீது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார், இதனால் அப்பகுதி விவசாயிகள் இடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியது,

உடனடியாக இது தொடர்பாக தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான் தலைமையில் இன்று செஞ்சியில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர், அதில் இறந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது, மேலும் அக்குடும்பதில் ஒருவருக்கு அரசு வேலை, அப்பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கப்பட்ட பின்னரே மின் கோபுர பணியை தொடங்குவது என முடிவு எடுத்தனர், கூட்டத்தில் சப் கலெக்டர், வட்டாட்சியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!