செஞ்சியில் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட சமுதாய கூடம் திறக்கப்படுமா?

செஞ்சியில் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட  சமுதாய கூடம் திறக்கப்படுமா?
X

அனந்தபுரத்தில் கடந்த 2007ல் 30 லட்சத்தில் மதிப்பில் கட்டப்பட்டு கட்டுமான பணிகள் முழுமை பெறாமல், பணியை கிடப்பில் போடப்பட்டு 13 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ள சமுதாயக்கூடம்

செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட அனந்தபுரத்தில் கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்ட சமுதாய கூடம் இன்றுவரை திறக்கப்படவில்லை, இனியாவது திறக்கப்படுமா?

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட அனந்தபுரத்தில் கடந்த 2007ல் 30 லட்சத்தில் மதிப்பில் கட்டப்பட்டு கட்டுமான பணிகள் முழுமை பெறாமல், பணியை கிடப்பில் போடப்பட்டு 13 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ள சமுதாயக்கூடம், கட்டடம் பாழடைந்து வரும் நிலையில் புதுப்பித்து திறக்கப்படுமா அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட அனந்தபுரம் பேரூராட்சி சார்பில் அனந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே ரூபாய் 30 லட்சம் மதிப்பில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கடந்த திமுக ஆட்சியில் 2007 ஆம் ஆண்டு கட்டப்பட்ட சமுதாயக்கூடம் கட்டிடம் முழுமை பெறாததால் 13 ஆண்டுகளாக திறக்கப்படாமல் பாழடைந்து வருகிறது.

அதன் பிறகு வந்த அதிமுக ஆட்சியில் எந்த நடவடிக்கை இல்லாமல் சமுதாயக்கூடம் பாழடைந்து வரும் நிலையே ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நாளேடுகளில் செய்தி மூலமாக அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வருகிறது, இந்த கட்டிடத்தை சுற்றி ஏராளமான செடி கொடிகள் வளர்ந்து காணப்படுகின்றன. மேலும் கதவுகள் இல்லாமல் திறந்தே இருப்பதால் மாடுகளை கட்டியும், கட்டடத்தை சீரழித்து வருகின்றனர். மேலும் சமூக விரோதிகளின் கூடாரமாக அந்த கட்டிடம் மாறிவருகிறது.

அனந்தபுரம் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதி கிராமங்களில் திருமணம், மற்றும் சுப நிகழ்ச்சி உள்ளிட்ட விழாக்கள் நடத்துவதற்கு தனியார் திருமண மண்டபத்தை நாட வேண்டிய நிலை உள்ளது. ஒவ்வொரு விழாவுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை மண்டபத்திற்கு செலவு செய்ய வேண்டி உள்ளது. இதன் காரணமாக ஏழை எளிய அடித்தட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் சமுதாயக்கூடம் முழுமை பெற்று திறக்கப்படவேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது

மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பாழடைந்த சமுதாய கூடத்தை முழுமைப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும், கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட சமுதாயக்கூடத்தை தற்போது திமுக ஆட்சியிலேயே நிறைவு செய்து திறப்புவிழா நடைபெறவேண்டும் என்பதே இந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil