மின்வாரிய ஊழியர்கள் பொது வேலை நிறுத்தம் குறித்து பிரச்சாரம்

மின்வாரிய ஊழியர்கள் பொது வேலை நிறுத்தம் குறித்து பிரச்சாரம்
X

அனந்தபுரம் மின்வாரிய அலுவலகத்தில் பொது வேலை நிறுத்தம் குறித்து மின்சார வாரிய ஊழியர்கள் பிரச்சாரம் 

செஞ்சி அருகே அனந்தபுரம் மின்வாரிய அலுவலகத்தில் பொது வேலை நிறுத்தம் குறித்து மின்சார வாரிய ஊழியர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர்

மின் துறையை பொதுத்துறையாக பாதுகாக்க ஆகஸ்ட் 10 தேதி பொது வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது.

அந்த வேலைநிறுத்தத்தில் மின் ஊழியர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள் பங்கேற்பதற்காக அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் செஞ்சி, அனந்தபுரம் மின் வாரிய அலுவலகம் முன்பு பிரச்சார இயக்கம் துவங்கியது.

செஞ்சி,மேல்மலையனூர் தாலுக்காவில் உள்ள 22 மின் வாரிய பிரிவுகளில் பணிபுரியும் 500 பொறியாளர்கள், தொழிலாளர்கள், அலுவலர்கள் ஆகியோரிடம் ஆதரவு திரட்டினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!