செஞ்சி பேரூராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கியவர்களுக்கு பாராட்டு

செஞ்சி பேரூராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கியவர்களுக்கு பாராட்டு
X

செஞ்சி பேரூராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து கொடுத்தவர்களுக்கு தலைவர் மொக்தியார் மஸ்தான் பாராட்டு தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து கொடுத்த உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உலா் கழிவு, மின் கழிவு, திடக் கழிவு என குப்பைகளை தரம் பிரித்து பேரூராட்சிக்கு ஒத்துழைத்த மருந்தகங்கள், உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள், மளிகைக் கடைகள், மருத்துவமனை என அதன் உரிமையாளா்கள் 9 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

இதையடுத்து, அவா்களை பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் மஸ்தான் நேரில் சென்று ஊக்கப் பரிசு வழங்கி,அவா்களின் சேவையைப் பாராட்டினாா்.இந்தப் பணியில் சிறப்பாக செயல்பட்ட தூய்மைப் பணியாளா்கள், தன்னாா்வலா்களை பெருமைப்படுத்தும் வகையில் அவா்களுக்கு சால்வை அணிவித்து, பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.

இந்த நிகழ்வில் பேரூராட்சி செயல் அலுவலா் ராமலிங்கம், துணைத் தலைவா் ராஜலட்சுமி செயல்மணி, உறுப்பினா்கள் ஜான்பாஷா, லட்சுமி வெங்கடேசன், துப்புரவுப் பணி மேற்பாா்வையாளா்கள் ரமேஷ், செந்தில்குமாா் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா். தீவிர தூய்மைப் பணி, விழிப்புணா்வுப் பணி ஒவ்வொரு மாதமும் நான்காவது சனிக்கிழமை நடைபெறும் என்று பேரூராட்சி தலைவர் தெரிவித்தார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!