செஞ்சியில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

செஞ்சியில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்
X

அமைச்சர் மஸ்தான் முன்னிலையில் திமுகவில் இணைந்த ஊராட்சி மன்ற தலைவர் சரளா பாலு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் அமமுக வேட்பாளர் தேமுதிக ஊராட்சி தலைவர் அமைச்சர் மஸ்தான் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

தே.மு.தி.க.மாவட்ட பிரதிநிதியும் காரிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சரளா பாலு மற்றும் செஞ்சி பேரூராட்சி 5 வது வார்டில் வேட்புமனு தாக்கல் செய்த அ.ம.மு.க.வேட்பாளர் பானு சுந்தர் ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகி அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்,

திமுகவில் இணைந்த நிர்வாகிகளுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் சால்வை அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன்,சுப்பிரமணியன் பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், கவுன்சிலர்கள் பத்மநாபன்,பெருமாள் அர்ஷத்,செஞ்சி பேரூராட்சி 5வது வார்டுவேட்பாளர் கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா