விவசாயிகளுக்கு வேளாண் அலுவலர்கள் பயிற்சி

விவசாயிகளுக்கு வேளாண் அலுவலர்கள் பயிற்சி
X

வேளாண் பயிற்சியில் மேல்மலையனூர் வட்டார விவசாயிகள்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண் அலுவலர்கள் பயிற்சி அளித்தனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆத்மா மாநில விரிவாக்கத் திட்ட கருத்துக்கான உறுதுணை சீரமைப்பு திட்டம் ஐய்மா இயங்கி வருகிறது. இதன் மூலம் 22 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, அக்கிராம விவசாயிகளுக்கு வேளாண் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடலி கிராம விவசாயிகளுக்கு நவீன முறையில் காய்கறி உற்பத்தி செய்தல், தரம்பிரித்தல் மற்றும் இருப்புவைத்தல், வணிக முத்திரை படுத்துதல் மற்றும் வணிக உக்திகள் குறித்து பயிற்சியினை மேல்மலையனூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் வழங்கினார்.

இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Tags

Next Story
photoshop ai tool