பரோலில் வந்து 11 ஆண்டு தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி மீண்டும் கைது

பரோலில் வந்து 11 ஆண்டு தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி மீண்டும் கைது
X

செஞ்சி காவல் நிலையம் பைல் படம்.

Crime News Today -விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பரோலில் வந்து 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதியை போலீசார் கைது செய்தனர்.

Crime News Today -பரோலில் வந்து 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கோவில் புரையூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்ராஜ். இவரது மகன் வெங்கடேசன் (வயது 42). கடந்த 2008-ம் ஆண்டு சென்னையில் நடந்த ஒரு கொலை வழக்கில் வெங்கடேசனை குற்றவாளி என அறிவித்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 18-5-2011 அன்று 5 நாட்கள் பரோலில் வெங்கடேசன் சிறையில் இருந்து வெளியே வந்தார். ஆனால் பரோல் முடிந்து மீண்டும் அவர் சிறைக்கு செல்லாமல் தலைமறைவானார். இது குறித்த புகாரின் பேரில் அவலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை தேடி வந்தனர்.

இருப்பினும் அவர் 11 ஆண்டுகளாக போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார், இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்படி செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷினி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், விஸ்வநாதன் மற்றும் போலீசார் ஞானம், மணி ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் வெங்கடேசனை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் வெங்கடேசன் சொந்த ஊருக்கு வந்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கோவில்புரையூர் கிராமத்துக்கு சென்று வெங்கடேசனை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை செஞ்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் இந்த சம்பவத்தால் பராமரிப்பு ஏற்பட்டது.

இதேபோன்று மாவட்ட முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா உத்தரவின் பேரில் தலைமுறை குற்றவாளிகள், கள்ளச்சாராயத்தில் ஈடுபடுபவர்கள், கஞ்சா விற்பவர்கள் போக்குவரத்து விதிமுறையை மதிக்காதவர்கள் உள்ளிட்டவர்கள் மீது கடந்த சில நாட்களாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு போலீசார் அனுப்பி வைத்து வருகின்றனர்.

இந்த நிலை மாவட்டத்தில் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது .அதனால் மாவட்ட காவல்துறை பல்வேறு இடங்களில் குற்றம் செய்துவிட்டு மாவட்டத்தில் பதுங்கி இருப்பவர்களை கண்காணித்து கண்டுபிடித்து கைது செய்து வருகின்றனர். மேலும் முன்னெச்சரிக்கையாக பழைய குற்றவாளிகளையும் தற்போது கண்காணிப்பு செய்து கைது நடவடிக்கை நடைபெற்று வருகிறது. இதனால் மாவட்டத்தில் பல இடங்களில் போலீசார் எந்த நேரத்திலும் நோன்பு பணி ஈடுபட்டு வருகின்றனர். அதனால் குற்றவாளிகள் தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் மாவட்ட மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் காவல்துறையின் இந்த நடவடிக்கையால் மாவட்டத்தில் குற்றம் செய்வோர் அஞ்சு நடுங்கி குற்றங்கள் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதே நிலை நீடிக்க வேண்டுமென்ற கோரிக்கையையும் மக்கள் வைத்து உள்ளனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததால் மாநகராட்சி பில் கலெக்டர் மீீது புகார்!