செஞ்சி அருகே 150 ஆண்டு பழமையான மரம் எரிந்ததால் பரபரப்பு

செஞ்சி அருகே 150 ஆண்டு பழமையான மரம் எரிந்ததால் பரபரப்பு
X
தீப்பற்றி எரியும் பழமையான மரம்.
Tree On Fire -செஞ்சி அருகே 150 ஆண்டு பழமையான மரம் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tree On Fire -செஞ்சி அருகே 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி-திண்டிவனம் சாலையில் வடவானூர் பஸ் நிறுத்தம் அருகே சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த காட்டுவாகை மரம் ஒன்று இருந்தது, இந்த மரம் அப்பகுதி மக்களுக்கு நிழல் தரும் மிக பெரிய பணியை செய்து கொண்டு வந்தது.

இந்நிலையில் இந்த மரத்தில் இருந்து புகை வெளியேறியது. அடுத்த சில நிமிடங்களில் மரம் தீப்பிடித்து எரிய தொடங்கியது. அப்போது லேசான காற்று வீசியதால் தீ மளமளவென கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர், இதுபற்றி தகவல் பெற்ற உடனடியாக செஞ்சி தீயணைப்பு மற்றும் மீட்பு குழு வீரர்கள் அங்கு விரைந்து வந்து, நீண்ட நேரம் போராடி மரத்தில் பற்றி எரிந்து கொண்டு இருந்த தீயை அணைத்தனர்.

இதனால் மரம் முழுவதும் எரியாமல் காப்பாற்றப்பட்டது. மர்ம நபர்கள் யாரேனும் தீப்பற்றக் கூடிய ரசாயன பொருட்கள் அல்லது பட்டாசுகளை மரத்தில் போட்டு சென்று இருக்கலாம். அதன் மூலம் மரம் தீப்பிடித்து எரிந்து இருக்கலாம் என தீயணைப்பு மற்றும் மீட்பு குழு வீரர்கள் சந்தேகம் அடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று மாவட்டம் முழுக்க சாலை ஓரம் உள்ள மரங்களில் திடீர் திடீரென தீ ஏற்பட்டு மரங்கள் கருகி வரும் நிலை ஆங்காங்கே ஏற்பட்டு வருகிறது. ஆனால் அந்த சம்பவங்கள் எதுவும் வெளிவராமலேயே போகிறது என்றும் இது போன்ற சம்பவங்கள் மட்டும் இந்த தீபாவளி நேரம் என்பதால் வெளிப்பட்டு இருக்கிறது என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் சாலை ஓரம் மரங்களையும் வனப்பகுதியில் உள்ள மரங்களையும் அரசும் சம்பந்தப்பட்ட துறையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகளும் எழுப்பப்பட்டு தான் வருகிறது.

ஆனால் சாலையில் போடுகிறோம் எனக் கூறிக் கொண்டு சாலைகளுக்கு இடைஞ்சல் இல்லாத மரங்களையும் சேர்த்து ஒப்பந்ததாரர்கள் வெட்டி விற்று வருவதும் சாலை பணியின் போது நடைபெற்று வருகிறது. அதே போன்று ஏறி குளங்கள் வனப்பகுதிகளில் அவ்வப்போது மரங்கள் வெட்டப்பட்டு அப்பகுதியில் உள்ள செங்கல் சூளைகளுகளுக்கு கடத்தி விற்கப்படும் நிலையும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

அதனால் அரசு மாவட்டத்தில் உள்ள வனப் பகுதிகள் ஏரி குளங்கள் சாலையோரம் மரங்கள் ஆகியவற்றை சரியான முறையில் கணக்கெடுப்பு செய்து மரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதோடு இது மாதிரி மரங்களை தீ வைப்பவர்கள் மற்றும் மரங்களை வெட்டி கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தடுத்து இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என இயற்கை ஆர்வாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு