செஞ்சி அருகே முன்விராேதம் காரணமாக வாலிபர் அடித்து கொலை: 2 பேர் கைது

செஞ்சி அருகே முன்விராேதம் காரணமாக வாலிபர் அடித்து கொலை: 2 பேர் கைது
X

செஞ்சி அருகே முன்விரோதத்தில் வாலிபரை அடித்து காெலை செய்த விஜயகுமார் மற்றும் ராஜேந்திரன்.

செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் அடித்து கொலை செய்த சம்பவத்தில் இருவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்திற்கு உட்பட்ட சே.பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை இவரது மகன் வீரமுத்து(27) இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. அதே ஊரைச்சேர்ந்த சுந்தரம் என்பவரது குடும்பத்திற்கும், அண்ணாமலை குடும்பத்தினருக்கும் இட பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் இன்று வீரமுத்து, சுந்தரம் வீட்டின் உள்ளே சென்று பொருட்களை உடைத்து வீட்டிற்கு தீ வைத்தாராம். இதனை பார்த்த சுந்தரத்தின் மகன்கள் விஜயகுமார் மற்றும் ராஜேந்திரன், மனைவி ரத்தினம் ஆகியோர் வீரமுத்துவை கீழே தள்ளி தடியால் தாக்கியும், அவரது தலையில் கல்லை போட்டு தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்து நிகழ்விடத்திலேயே இறந்துவிட்டார்.

இது குறித்து அண்ணாமலை நல்லாண்பிள்ளைபெற்றாள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சுந்தரம் மகன்கள் விஜயகுமார், ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய சுந்தரத்தின் மனைவி ரத்தினம் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!