மின்சார சட்ட திருத்தத்தை கைவிட கோரி மத்திய அரசை கண்டித்து மின் ஊழியர்கள் ஆர்பாட்டம்

மின்சார சட்ட திருத்தத்தை கைவிட கோரி மத்திய அரசை கண்டித்து மின் ஊழியர்கள் ஆர்பாட்டம்
X
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் மத்திய அரசை கண்டித்து மின் ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் மத்திய அரசின் 2021 மின்சார சட்ட திருத்தத்தை கைவிடக்கோரி மின் வாரிய தொழிற்சங்க கூட்டு குழு சார்பில் செஞ்சி மின்சார செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தோமுச மாநில துணை தலைவர் இரா.தேசிங்கு தலைமை வகித்தார். திட்ட இணை செயலர் சிஐடியு பி.சிவசங்கரன், பொறியாளர் சங்கம் மணியரசு, பொறியாளர், தொழிலாளர் ஐக்கிய சங்கம் ராஜா, சம்மேளன கோட்ட செயலர் நாராயணசாமி, திட்ட பிரச்சார செயலர் ஜெயச்சந்திரன், தொமுச ராசையன், கோட்ட தலைவர் பெருமாள், தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் ஜி.ராஜா, மற்றும் மின் வாரிய தொழிலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story
ai in future agriculture