Begin typing your search above and press return to search.
செஞ்சி அருகே பள்ளி இடம் ஆக்ரமிப்பு: பொதுமக்கள் தடுத்து நிறுத்தம்
செஞ்சி அருகே சத்தியமங்கலத்தில் பள்ளி இடத்தை ஆக்ரமிப்பு செய்து தனிநபர் கட்டிடம் கட்டியதை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.
HIGHLIGHTS

பள்ளி இடத்தை ஆக்ரமிப்பு செய்து தனிநபர் கட்டிடம் கட்டியதை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி வட்டத்திற்கு உட்பட்ட சத்தியமங்கலத்தில் அரசினர் மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஆக்கிரமித்து உள்ளார். அந்த இடத்தை மீட்க வேண்டி சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கை இல்லை.
அதனால் ஆக்ரமிப்பு செய்த தனிநபர் ஆக்ரமிப்பு இடத்தில் கட்டுமான பணிகள் செய்து வருகிறார். இதனை சுற்று வட்டார கிராம பொதுமக்கள் ஒன்று திரண்டு தடுத்து நிறுத்தினர், இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
இனியாவது அரசும், சம்மந்தப்பட்ட துறையும் தனிநபர் ஆக்கிரமிப்பை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை எழுப்பினர்.