போட்டி தேர்வுக்கு தயாராக விழுப்புரத்தில் இலவச பயிற்சி

போட்டி தேர்வுக்கு தயாராக விழுப்புரத்தில் இலவச பயிற்சி
X

விழுப்புரம் கலெக்டர் மோகன்.

போட்டி தேர்வுகளில் கலந்து கொள்பவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு புதன்கிழமை முதல் தொடங்கி நடக்கிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் மத்திய அரசுப் பணியாளா் தோ்வு ஆணையத்தின் (எஸ்.எஸ்.சி.- சி.எச்.எஸ்.எல்.) தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு புதன்கிழமை முதல் தொடங்கி, ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.

இந்தப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடைய விரும்புவோா், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகிப் பதிவு செய்யலாம். எனவே, விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த தோ்வுக்கு விண்ணப்பித்த இளைஞா்கள், இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்து உள்ளார்.

Next Story
ai in future agriculture