மாவட்டத்தில் தயார் நிலையில் தீயணைப்பு மீட்பு துறை
விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலகம்
இயற்கை இடர்பாடுகளை சமாளிக்கும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளதாக விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து விடுக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பில், விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பேரிடரை எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை 24x7 செயல்படும் வகையில் சிறப்பு உபகரணங்களுடன் ஆபத்து காலங்களில் மீட்பதற்கு தயார் நிலையில் உள்ளது.
தாழ்வான பகுதிகள் வெள்ள நீர் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகள் போன்றவை கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாதிரி ஒத்திகை பயிற்சிகள் நடத்தி பொதுமக்களுக்கு விழுப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களை மீட்பதற்கு இரப்பர் படகுகள் மற்றும் மோட்டார் படகுகள் தயார் நிலையில் உள்ளது.
மழை வெள்ள காலங்களில் பிற அரசு துறையினருடன் ஒருங்கிணைந்து மீட்புபணி மேற்கொள்ளப்படும். விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபடியான மழைபொழிவின் காரணமாக ஏரி, குளம், ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அதனை வேடிக்கைபார்க்க செல்லும் போது பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்,
101,102 என்ற எண்ணில் தீயணைப்பு மீட்புபணிகள் துறைகட்டுபாட்டு அறைக்கும் தீ செயலிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம், மேலும்மாநில பேரிடர் கட்டுப்பாட்டு அறை - 1070, 9445869843 ஆகிய எண்களிலும், மருதம் கட்டுபாட்டு அறை 044 -24331074, 044 -24343662 என்ற எண்களிலும் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu