கோரிக்கையை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது

கோரிக்கையை  வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது
X

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்

விழுப்புரம் மாவட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது.

விழுப்புரத்தில் மாநில குழு உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன், விக்கிரவாண்டியில் மாவட்ட செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, கண்டாச்சிபுரத்தில் மாவட்ட தலைவர் பி.முருகன், வானூரில் மாவட்ட துணைச்செயலாளர் எம்.கே.முருகன், திண்டிவனத்தில் மாவட்ட துணைத்தலைவர் பாவாடைராயன் ஆகியோர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 500 க்கும் மேற்பட்டோர் போலீீீசாரால் கைது செய்யப்பட்டனர் .

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்