விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தும் குற்றங்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தும் குற்றங்கள்
X

பைல் படம்.

விழுப்புரம் மாவட்டத்தில் நடக்கும் குற்றங்களால் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சுதாகர் (வயது 43) கூலித்தொழிலாளி. இவரது மனைவி ரமணி (43) இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

சுதாகருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் ரமணி கடந்த 7-ந் தேதி சென்னையில் இருந்த மகனை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த சுதாகர், ரமணியிடம் தகராறில் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் வாய்தகராறு அடிதடி சண்டையாக மாறியது. ரமணி மீது சந்தேக மோகத்தால் சுதாகர் மனைவி என்றும் கூட பாராமல் இரும்பு ராடால் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் ரமணி ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார்.

இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்து ரமணியை மீட்டு மரக்காணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு ரமணிக்கு மோசமான நிலைமையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து ரமணி மரக்காணம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்கு பதிவு செய்து மனைவியை கண்மூடித்தனமாக தாக்கிய கணவர் சுதாகரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனத்தில் அரசு ஆஸ்பத்திரியில் திண்டிவனம் மற்றும் அதனை சுற்றி உள்ள மக்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் விபத்து மற்றும் பல்வேறு காரணங்களினால் இறப்பவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக இங்கு தான் கொண்டு வருவது வழக்கம். பிரேத பரிசோதனைக்காக இந்த ஆஸ்பத்திரியில் குளிரூட்டப்பட்ட பிணவறை உள்ளது.

இன்று காலை இந்த பிணவறையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை அந்த வழியாக சென்ற நபர்கள் பார்த்து அதிர்ச்சடைந்து இதுகுறித்து ரோசனை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த ரோஷனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு பிணவறையின் பூட்டை உடைத்தது யார் என்றும் இதற்கான காரணம் குறித்தும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் திண்டிவனம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இது மட்டுமா குற்றம் இதோ விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அரும்பட்டு கிராமத்தில் மதுரை வீரன் கோவில் உள்ளது. இந்த கோவில் முகப்பில் காவல் தெய்வங்கள் உள்ளது. நேற்று இரவு மர்ம நபர்கள் அங்கு சென்றனர். அவர்கள் சாமி சிலைகளை உடைத்து உள்ளனர். இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள்சாமி சிலைகள் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பழனி தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து சாமி சிலைகளை உடைத்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!