விழுப்புரம் மாவட்டத்தில் குறையும் கொரோனாவால் மக்கள் நிம்மதி

விழுப்புரம் மாவட்டத்தில் குறையும் கொரோனாவால் மக்கள் நிம்மதி
X
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி உள்ளது மக்களுக்கு சற்று நிம்மதியை தந்துள்ளது

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 382 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதுவரை 39,665 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இன்று மட்டும் 2 பேர் உயிரிழந்துள்ளனர், இதுவரை 304 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை மட்டும் 609 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 35,544 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 3,817 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி உள்ளது மக்களுக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!