தேர்தல் விதிமுறை மீறல்கள் புகார்கள் தெரிவிக்கலாம், மாவட்ட தேர்தல் அலுவலர்

தேர்தல் விதிமுறை மீறல்கள் புகார்கள் தெரிவிக்கலாம், மாவட்ட தேர்தல் அலுவலர்
X
தேர்தல் விதிமீறல் புகார்களை பொதுமக்கள், நேரில் கூறலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்

விழுப்புரம் மாவட்டத்தில் ஏழு சட்டசபை தொகுதிகளில், தேர்தல் தொடர்பான நடத்தை விதிகள் மற்றும் விதிமீறல்கள் இருந்தால், தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள பொது பார்வையாளரிடம் நேரிலோ அல்லது தொலைபேசி மூலமோ தகவல் தெரிவிக்கலாம்.

இதில், செஞ்சி, மயிலம் தொகுதிகளுக்கு தேர்தல் பொது பார்வையாளராக வினோத்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.இவரை, செஞ்சி, நெடுஞ்சாலை பயணிகள் விடுதி, அறை எண் 1ல், காலை 9.00 மணி முதல் 10.00 மணிவரை நேரில் பார்க்கலாம். இவரது மொபைல் எண் 9489984990 ஆகும்.

திண்டிவனம் (தனி) வானுார் (தனி) தொகுதிகளுக்கு, தேர்தல் பொதுபார்வையாளர் முகமது கைசர் அப்துல்ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை, திண்டிவனம், ஜக்காம்பேட்டை, பொதுப்பணி துறை ஆய்வு மாளிகை, அறை எண் 7 ல் காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை நேரில் சந்திக்கலாம். இவரது மொபைல் எண்: 9489984991.

விழுப்புரம், விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு தேர்தல் பொது பார்வையாளர் ரஞ்சிதா நியமிக்கப்பட்டுள்ளார். இவரை, விழுப்புரம் பெருந்திட்ட வளாகம், பொதுப்பணி துறை ஆய்வு மாளிகை, அறை எண் 4 ல், காலை 11.00 மணி முதல் பகல் 12.00 வரை நேரில் சந்திக்கலாம். இவரது மொபைல் எண் 9489984992.

திருக்கோவிலுார் தொகுதி தேர்தல் பொது பார்வையாளராக பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை, திருக்கோவிலுார் நெடுஞ்சாலை பயணியர் மாளிகை அறை எண் 1 ல் நேரில் சந்தித்து, காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை புகார்களை கூறலாம். இவரது மொபைல் 9489984993.

இத்தகவலை மாவட்ட தேர்தல் அலுவரான ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!