காட்டுப் பன்றிகளை விரட்ட புதிய தொழில்நுட்பம்: விழுப்புரம் கலெக்டர் தகவல்
விழுப்புரம் கலெக்டர் மோகன்
விழுப்புரம் மாவட்டத்தில் பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டும் தொழில்நுட்பம் குறித்து மாவட்ட கலெக்டர் த.மோகன் தகவல் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து மாவட்ட கலெக்டர் மோகன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள், காட்டுப்பன்றிகளால் சேதப்படுத்தக்கூடும் எனக் கருதும் வயல்களைச் சுற்றி 10 அடி இடைவெளியில் மரக்குச்சிகள் அமைக்க வேண்டும்.
குச்சியின் இருபுறமும் குறைந்தது 2 அடி வரை களைச்செடிகள் இல்லாமல் இருக்க வேண்டும். தரைமட்டத்திலிருந்து ஒரு அடி முதல் 1.5 அடி உயரத்தில் கட்டுக் கம்பிகளை கட்ட வேண்டும்.அதில் டப்பா கட்டி தொங்கவிட வேண்டும், ஒவ்வொரு டப்பாவிலும் மூடிக்கு கீழ் நான்கு துளைகளை இட வேண்டும்.
துளையிட்ட டப்பாவில் காட்டுப்பன்றி விரட்டி (பயோ வைல்டு போா் ரிப்பளன்ட்) என்ற மருந்தை 5 மி.லி என்றஅளவில் ஊற்றி நூல் மூலமாக வயலைச் சுற்றிலும் கம்பியில் கட்டி தொங்கவிட வேண்டும். சிறிய டப்பா எண்ணிக்கை 100 என்ற அளவில் ஓா் ஏக்கருக்கு 500 மி.லி தேவைப்படும். இது குறைந்த விலையில் பயன்படுத்தக்கூடிய உள்நாட்டு தொழில்நுட்பமாகும். இந்த மருந்து கட்டிய பிறகு அதன் வீரியம் 67 முதல் 105 நாள்கள் வரை இருக்கும். இது சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது.
நெல், நிலக்கடலை, கரும்பு, சிறுதானியங்கள் போன்ற பயிா்களில் பயன்படுத்தலாம். கூடுதல் விவரங்கள், தகவல்களுக்கு திட்டஒருங்கிணைப்பாளா், வேளாண்மை அறிவியல் நிலையம், திண்டிவனம் அலுவலகத்தை நேரிலோ அல்லது 9442151096 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்புகொண்டு பெறலாம் என அதில் கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu