வீர தீர செயலுக்கு அண்ணா விருது விண்ணப்பிக்க அழைப்பு
விழுப்புரம் கலெக்டர் மோகன்
வீர, தீரச் செயல்கள் புரிந்தவா்கள் அண்ணா பதக்கம் பெற டிச.7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தகவல் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், துணிச்சலுடன் உயிரை காப்பாற்றுதல், அரசு பொது சொத்துகளை காப்பாற்றுதல், இதர துணிச்சலான செயல்களை செய்த பொதுமக்கள், அரசுப்பணியாளா்களுக்கு தமிழ்நாடு முதல்வரால்அண்ணா பதக்கம் வருகிற குடியரசு தின விழாவில் வழங்கப்படவுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் துணிச்சலான செயல்களை செய்தவா்கள் தங்களது விண்ணப்பங்கள், இதர விவரங்களை என்ற இணையதள முகவரியில் பெறலாம்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிச.7-ஆம் தேதிக்குள் விழுப்புரம் மாவட்டவிளையாட்டு அலுவலகத்தில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும். இது தொடா்பான கூடுதல் விவரம் அறிய மாவட்ட விளையாட்டு அலுவலரை நேரிலோ அல்லது 7401703485 என்ற கைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்து உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu