விழுப்புரத்தில் அம்பேத்கர் பிறந்தநாள்

விழுப்புரத்தில் அம்பேத்கர் பிறந்தநாள்
X
விழுப்புரத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் முன்பு உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு அவரது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் விழுப்புரம் வட்ட குழு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்விழுப்புரம் மாவட்ட குழு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி விழுப்புரம் வட்டச் செயலாளர் தோழர் என்.மேகநாதன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் வி. ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி விழுப்புரம் மாவட்ட தலைவர் தோழர் எஸ்.முத்துக்குமரன், ஆகியோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார்கள்.

இந் நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் வட்டச் செயலாளர் தோழர் ஆர். கண்ணப்பன், விழுப்புரம் மாவட்ட குழு உறுப்பினர் தோழர் எம். புருஷோத்தமன், பிஎஸ்என்எல் அரங்கத்தை சார்ந்த தோழர்கள் ஜி. நாகராஜன், ஆர். முத்துவேல், கட்டுமான சங்கத்தின் மாவட்ட செயலாளர் தோழர் பாலகிருஷ்ணன், மாவட்ட குழு உறுப்பினர் தோழர் அந்தோணி ஜனநாயக மாதர் சங்க விழுப்புரம் மாவட்டத் தலைவர் தோழர் நீலா மற்றும் மூத்த உறுப்பினர் பேச்சியம்மாள், வி. தொ. ச. விழுப்புரம் மாவட்டத் தலைவர் தோழர் அழகு நாதன் மற்றும் தோழர்கள் மகாலிங்கம், ராஜேந்திரன்,ரவீந்திரன்ஆர்.மணிகண்டன்,சதீஷ் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!