விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 9644 பேர் மனு தாக்கல்
விழுப்புரத்தில் உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல்]
விழுப்புரம் மாவட்டத்தில் வருகின்ற 6,9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக 28 மாவட்ட கவுன்சிலர், 293 ஒன்றிய கவுன்சிலர், 688 ஊராட்சி மன்றத் தலைவர், 5088 ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 6097 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. அதனையடுத்து கடந்த 15 ந்தேதி முதல் தேர்தலில் போட்டியிடுவோர் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர், வரும் 23ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாட்களாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது,
இந்நிலையில் மாவட்டம் முழுவதும் இன்று 9644 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர், அதில் மாவட்ட கவுன்சிலருக்கு 51 பேரும், ஒன்றிய கவுன்சிலருக்கு 693 பேரும், ஊராட்சி மன்றத் தலைவருக்கு 2106 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 6794 பேரும் வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளனர்,
கடந்த நான்கு நாட்களில் மாவட்டத்தில் 14952 பேர் வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளனர், அதில் மாவட்ட கவுன்சிலருக்கு 61 பேரும்,ஒன்றிய கவுன்சிலருக்கு 790 பேரும், ஊராட்சி மன்றத் தலைவருக்கு 2947 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 11154 பேரும் இதுவரை தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu