விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 69 பேர் மனு தாக்கல்

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 69 பேர் மனு தாக்கல்
X
விழுப்புரம் மாவட்டத்தில் நடக்க உள்ள நகராட்சி பேரூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு இதுவரை 69 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சி 7 பேரூராட்சி ஆகியவற்றில் உள்ள 210 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு,கடந்த 28ந்தேதி முதல் மனுத்தாக்கல் தொடங்கி வரும் 4 ந்தேதி வரை நடைபெறுகிறது

இந்நிலையில்இன்று விழுப்புரம் நகராட்சியில் 2 பேரும், திண்டிவனத்தில் ஒருவரும், கோட்டகுப்பத்தில் 14 பேரும், வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

வளவனூர் பேரூராட்சியில் 5 பேரும், மரக்காணத்தில் 9 பேரும், திருவெண்ணெய்நல்லூரில் ஒருவரும் அரகண்டநல்லூரில் ஒருவரும், ஆனந்தபுரத்தில் இருவரும் என இதுவரை 210 பதவிகளுக்கு 69 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

விக்கிரவாண்டி, செஞ்சி ஆகிய பேரூராட்சியில் யாரும் இன்று மனு தாக்கல் செய்யவில்லை,

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!