விழுப்புரத்தில் இன்று 590 பேர் மனு தாக்கல்

விழுப்புரத்தில்  இன்று 590 பேர் மனு தாக்கல்
X
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று தேர்தலில் போட்டியிட 590 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சி 7 பேரூராட்சி ஆகியவற்றில் உள்ள 210 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு,கடந்த 28ந்தேதி முதல் மனுத்தாக்கல் தொடங்கி இன்று 4 ந்தேதி வரை நடைபெற்றது,

இன்று விழுப்புரம் நகராட்சியில் 126 பேரும், திண்டிவனத்தில் 113 பேரும், கோட்டகுப்பத்தில் 22 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வளவனூர் பேரூராட்சியில் 18 பேரும், விக்கிரவாண்டி 18 பேரும், செஞ்சி 100 பேரும், மரக்காணத்தில் 70 பேரும், திருவெண்ணெய்நல்லூரில் 55 பேரும்,அரகண்டநல்லூரில் 34 பேரும்,ஆனந்தபுரத்தில் 28 பேரும்,என 210 பதவிகளுக்கு இன்று 590 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சி,7 பேரூராட்சிகளில் இதுவரை மொத்தம் 1301 பேர் வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு மனு தாக்கல் செய்து உள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!