விழுப்புரம் மாவட்டத்தில் 4030 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்

விழுப்புரம் மாவட்டத்தில் 4030 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்
X
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 4ஆயிரத்து 30 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

விழுப்புரம் மாவட்டத்தில் வேகமாக தடுப்பூசி போடபடுவதால் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 7 லட்சத்து,80 ஆயிரத்து,956 பேருக்கு கொரோனா மாதிரி எடுக்கப்பட்டுள்ளது,

(25/11/2021) அன்று ஆயிரத்து,078 பேருக்கு மாதிரி எடுத்ததில் அதில் ஐந்து பேருக்கு பாசிடிவ் உறுதியானது, அதனால் மாவட்டத்தில் பாசிடிவ் 0.65 சதவீதம் ஆகும், இன்று புதன்கிழமை (26/11/21) ஆயிரத்து,108 பேருக்கு மாதிரி எடுக்கப்பட்டு உள்ளது, மாவட்டத்தில் இந்த வார பாசிடிவ் 0.14 சதவீதமாக உள்ளது.மாவட்டத்தில் இன்று கொரோனா வழக்கு ஏதும் பதியப்படவில்லை, அதற்கானஅபராத தொகையும் வசூலிக்க படவில்லை,

இதுவரை மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகள் மீறியதாக மொத்தம் 88 ஆயிரத்து,289 வழக்குகள் பதிவு செய்து உள்ளனர், இதன் மூலம் இதுவரை ஒரு கோடியே,91 லட்சத்து,74ஆயிரத்து, 900 அபராதமாக வசூலிக்க பட்டுள்ளது,

மாவட்டத்தில் 1 லட்சத்து,65 ஆயிரத்து 685 தடுப்பூசி இருப்பு உள்ளது, அதில் 26/11/21 வெள்ளிக்கிழமை மட்டும் 4 ஆயிரத்து 30 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர், இதுவரை மாவட்டத்தில் 18 லட்சத்து 48 ஆயிரத்து 596 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டு உள்ளனர் என மாவட்ட சுகாதாரத்துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்