7.5 அரசு ஒதுக்கீட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் 17 மாணவர்கள் தேர்வு
விழுப்புரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று, நீட் தோ்வில் வெற்றிபெற்ற மாணவா்கள் இந்த ஆண்டு மருத்துவக் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 14 மாணவா்களுக்கு எம்.பி.பி.எஸ். இடங்களும், 3 மாணவா்களுக்கு பல் மருத்துவ இடங்களும் கிடைத்தன.
இவா்களில் 10 மாணவா்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், 4 மாணவா்கள் தனியாா் மருத்துவக் கல்லூரிகளிலும் எம்.பி.பி.எஸ். படிப்பில் சோ்ந்தனா்.
2 மாணவா்கள் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளிலும், ஒரு மாணவா் தனியாா் பல் மருத்துவக் கல்லூரியிலும் சோ்ந்து உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் விராட்டிக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் ஹரிஷ்குமாா்,
பெரிய தச்சூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ரஞ்சிதா,
விழுப்புரம் பீமநாயக்கன் தோப்பு நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர் உதயக்குமாா்,
மேல்மலையனூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் பிரவின்குமாா்,
சிந்தாமணி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் மணிபாலன்,
விழுப்புரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மோஹசினா பானு, இலக்கியா, கோமளவல்லி, விஜயலட்சுமி, ஸ்வேதா, சாருலதா
தைலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி தேவி,
பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் ராமன்,
கண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் பாலாஜி, ஆகிய 14 பேர் எம்பிபிஎஸ் படிப்பும்,
விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆா்த்தி,
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி காா்த்திகா,
விழுப்புரம் சிந்தாமணி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் மாதவன் ஆகிய மூன்று மாணவர்களும் பிடிஎஸ் பல் மருத்துவம் பயில்வதற்கும் தோ்வாகியுள்ளனா்.
மருத்துவம் பயில தேர்வான மாணவர்களுக்கு ஆட்சியர் மோகன் உள்ளிட்ட பலர் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu