/* */

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 16,87,394 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 16லட்சத்து,87 ஆயிரத்து,394 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப் பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 16,87,394 பேருக்கு  தடுப்பூசி போடப்பட்டுள்ளது
X

விழுப்புரம் மாவட்டத்தில் வேகமாக கொரோனா தொற்று குறைந்து இன்று ஒருவருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை 7லட்சத்து,68ஆயிரத்து,369 பேருக்கு கொரோனா மாதிரி எடுக்கப்பட்டுள்ளது,

(15/11/2021) திங்கட்கிழமை மட்டும் ஆயிரத்து,522 பேருக்கு மாதிரி எடுத்ததில் அதில் ஒருவருக்கு மட்டும் கொரோனா உறுதியானது, அதனால் மாவட்டத்தில் பாதிப்பு 0.20 சதவீதம் ஆகும், இன்று செவ்வாய்க்கிழமை (16/11/21) ஆயிரத்து 575 பேருக்கு மாதிரி எடுக்கப்பட்டு உள்ளது, மாவட்டத்தில் இந்த வார பாசிடிவ் 0.10 சதவீதமாக உள்ளது.

மாவட்டத்தில் இன்று கொரோனா வழக்கு ஏதும் பதியப்படவில்லை, அதற்கானஅபராத தொகையும் வசூலிக்க படவில்லை,

இதுவரை மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகள் மீறியதாக மொத்தம் 88 ஆயிரத்து,289 வழக்குகள் பதிவு செய்து உள்ளனர், இதன் மூலம் இதுவரை ஒரு கோடியே 91 லட்சத்து,74 ஆயிரத்து, 900 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது,

மாவட்டத்தில் ஒரு லட்சத்து,56ஆயிரத்து,505 தடுப்பூசி இருப்பு உள்ளது, அதில் இன்று 16/11/21 செவ்வாய்க்கிழமை மட்டும் 12 ஆயிரத்து 714 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள்,

இதுவரை மாவட்டத்தில் 16 லட்சத்து 87ஆயிரத்து 374 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டு உள்ளனர் என மாவட்ட சுகாதாரத்துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 16 Nov 2021 4:43 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  6. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்