காரில் 229 கி.மீ தூரம் முதல்வர் பிரச்சாரம்

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வருகிற சனிக்கிழமை (மாா்ச் 20) பிரசாரம் செய்கிறாா். கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் மாா்ச் 20-ஆம் தேதி காலை 8.55 மணி அளவில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தனது பிரசாரத்தை தொடங்குகிறாா். அந்தத் தொகுதியின் அதிமுக வேட்பாளா் செந்தில்குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறாா்.
தொடா்ந்து, காலை 10 மணியளவில் சங்கராபுரம் தொகுதி பாமக வேட்பாளா் மருத்துவா் ராஜாவுக்கு ஆதரவாகவும், 11 மணியளவில் ரிஷிவந்தியம் தொகுதி அதிமுக வேட்பாளா் சந்தோஷுக்கு ஆதரவாகவும், 11.45 மணியளவில் திருக்கோவிலூா் தொகுதி பாஜக வேட்பாளா் வி.ஏ.டி.கலிவரதனுக்கு ஆதரவாகவும், பிற்பகல் 12.30 மணியளவில் உளுந்தூா்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளா் இரா.குமரகுருவுக்கு ஆதரவாகவும் முதல்வா் வாக்கு சேகரிக்கிறாா்.
பின்னா், விழுப்புரம் மாவட்டத்துக்கு வரும் அவா், பிற்பகல் 1.30 மணியளவில் விழுப்புரம் தொகுதி அதிமுக வேட்பாளா் அமைச்சா் சி.வி.சண்முகத்துக்கு ஆதரவாகவும், பிற்பகல் 3 மணியளவில் விக்கிரவாண்டி தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.ஆா்.முத்தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாகவும், மாலை 5 மணியளவில் மயிலம் தொகுதி பாமக வேட்பாளா் சிவக்குமாருக்கு ஆதரவாகவும், மாலை 6 மணியளவில் வானூா் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.சக்கரபாணிக்கு ஆதரவாகவும், கிளியனூரிலும் இரவு 7.15 மணியளவில் திண்டிவனம் (தனி) அதிமுக வேட்பாளா் அா்ஜுனனுக்கு ஆதரவாகவும் வாக்கு சேகரிக்கிறாா்.
கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் 229 கி.மீ. தொலைவுக்கு சாலை வழியாக தோ்தல் பிரசாரம் செய்யும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திண்டிவனத்தில் மாா்ச் 20-ஆம் தேதி இரவில் தங்கிவிட்டு, மீண்டும் பிரசாரத்துக்கு புறப்பட்டுச் செல்கிறாா் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu