விழுப்புரம் அருகே கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்து

விழுப்புரம் அருகே கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்து
X
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் டிப்பர் கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு

விழுப்புரம் அடுத்த நரைவூர் கிராமத்தில் கரும்பு விவசாயி சம்பத் என்பவர் நிலத்திலிருந்து 15 டன் எடை கொண்ட கரும்புகளை டிராக்டர் மூலம் ஓட்டுநர் ராஜாமணி முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலைக்கு ஏற்றிச் சென்றார்.

கோலியனூர் கூட்டுரோடு சாலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் டிப்பர் கவிழ்ந்து அனைத்துக் கரும்புகள் சாலையில் கொட்டியது இதனால் விழுப்புரம், புதுச்சேரி,கும்பகோணம், சென்னை செல்லும் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வளவனூர் போலீசார் ஜேசிபி எந்திரம் மூலம் கரும்புகளையும் டிராக்டரையும் அப்புறப்படுத்தினர். மேலும் விபத்து நடந்தபோது அவ்வழியாக வாகனங்கள் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது

Tags

Next Story
ai based agriculture in india