மக்களுக்குப் பயிற்சி அளிக்க வாக்கு இயந்திரங்கள் ஏற்பாடு
விழுப்புரம் மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள பகுதியில் இன்று மாவட்ட ஆட்சியர் அண்ணாத்துரை ஆய்வு செய்தார். இதில் இயந்திரங்கள் இரண்டு பகுதிகளையும் தனித்தனியாக பிரித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் வருகின்ற தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளுக்கும், மக்களின் பயிற்சிக்காக வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் செலுத்துவதற்கான பயிற்சிகளை வழங்குவதற்காக தக்க போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 118 வாக்கு இயந்திரங்களை அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை அரசின் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியினர் மட்டும் மக்களிடையே எடுத்துச் சென்று பயிற்சி அளிக்க வழங்கப்பட்டுள்ளது என்பதை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu